About us
இலக்கு (Goals)
எமது பிரதேசத்தில் காணப்படும் ஊழிய வளம் முதல் தொழில்நுட்பவளம் வரை அனைத்து வளங்களையும் வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் கையாளுதல்.
ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் அழிவடையும் தமிழ் மொழியையும், வெளிக்கொணரப்படாத தமிழ் பேசும் மக்களின் திறமைகளையும் உலகறியச் செய்தல்.
மேற்கத்தேய நாகரீகத்தின் உச்ச வளர்ச்சியால் இக் காலகட்டத்தில் சுடரொளியாக விளங்கவேண்டிய தாய்மை பேசும் தாய்த் தமிழ் மொழியினை மீண்டும் உலகம் முழுவதும் பிரகாசமாக ஒளிவீசச் செய்தல்.
புதியதொரு விதி செய்வோம் என்பதற்கிணங்க ஊடக துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்துதல்.
தூரநோக்கு (vission)
தமிழ் மொழியால் வானொலித் துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துதல்.
மாறிவரும் உலகில் எதிர்கால சந்ததிக்காக தமிழின் பெருமையை நிலை நாட்டுதல்.
ஊடக துறை பொழுது போக்குக்கு மட்டும் அல்ல வாழ்க்கையை வளப்படுத்தவும் காரணமாய் இருக்கும் என்ற சிந்தனையை அனைவருக்கும் உணர்த்துதல்.
இலட்சிய நோக்கு (mission)
எமது பிரதேசத்தில் காணப்படும் வளங்களை முழுமையாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி பல்கலை கற்றவர் முதல் பாமரர் வரை அனைத்து மக்கள் உள்ளத்திலும் தமிழால் வானொலித்துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துதல்.
பாரம்பரிய தமிழனின் அனுபவம் சார்ந்த அறிவினையும் தற்காலத்தில் வாழும் நவீன தொழினுட்ப மனிதனின் சிந்தனையினையும் ஒன்றிணைத்து புதிய வித்தாக உருமாற்றி கல்லாதவர் தொடங்கி கற்றவர் வரை அனைவரது வாழ்க்கையிலும் எமது வானொலி மையத்தினால் இதுவரை வரலாற்றில் இடம்பெறாத ஓர் பாரிய மறுமலர்ச்சியினை ஏற்படுத்துதல்.
தமிழ் மொழியை பேசுவது அநாகரிகம் என்ற எண்ணத்தை இல்லாது ஒழிக்க தமிழ் மொழியின் பெருமைகளை உணர்த்தி ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் தமிழ் மொழியினை முன்னேற்றுவதே எமது இலட்சிய நோக்காகும்.
"" தமிழ் வாழ வேண்டுமானால் நாம் தமிழை வளர்க்க வேண்டும்"