blog Thumb

22 . 02 . 2021 - நெடுந்தீவில் பதற்றம்! இரு மீனவர்கள் திடீர் மாயம் - படகு மட்டும் கரை சேர்ந்தது

யாழ்., தீவகம், குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயணித்த படகு, பாதணிகள் மற்றும் அவர்கள் ஏற்றி வந்த ஐஸ் கட்டிகள் உட்பட்ட பொருட்களுடன் கரையொதுங்கியுள்ளது.

படகில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஞானசிங்கம் ரமேஸ் (வயது - 41), ரஞ்சன் மயன் (வயது - 19) ஆகியோரே இன்று காணாமல்போயுள்ளனர். இவர்கள் இருவரும் நெடுந்தீவைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காணாமல்போன மீனவர்கள் இயற்கையான ஆபத்தைச் சந்தித்தார்களா? அல்லது அத்துமீறும் இந்திய மீனவர்களால் ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளதா? என்று சந்தேகம் நிலவுகின்றது என நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்தனர்.

>