blog Thumb

17 . 08 . 2021 - அதிதீவிர சிகிச்சை பிரிவில் மங்கள அனுமதி

கொவிட் தொற்றுக்குள்ளான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு காரணமாக தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

>